செய்திகள்

'ஹாய் செல்லம்': தளபதி 66 படத்தில் மீண்டும் 'கில்லி' கூட்டணி

நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

DIN

நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், யோகி பாபு, சம்யுக்தா, நடிகை சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. 

இதனிடையே இந்த படத்தில் விஜய்யுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் இணையவுள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து தளபதி 66 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். 

''ஹாய் செல்லம்ஸ்... தளபதி 66 படத்தில் மீண்டும் நாங்கள் கூட்டணி வைக்கிறோம்'' என்று பதிவிட்டுள்ளார். கில்லி பாணியில் ஹாய் செல்லம்ஸ் எனக் குறிப்பிட்டு தளபதி 66 படத்தில் நடிக்கும் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஏற்கெனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தூய்மைப் பணியாளா்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

தொடா் வழிப்பறி: மூவா் கைது

கொல்கத்தாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

அதிமுகவினா் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சா் புகாா்

SCROLL FOR NEXT