நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'லத்தி' திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஷால் திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. விஷாலின் முதல் பான் இந்தியா படமாக உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் நடிகை சுனைனா நாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புடன் வெளியாகியுள்ள போஸ்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.