தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் அவருடைய பிறந்த நாளன்று வெளியாகவுள்ளது.
மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - திருச்சிற்றம்பலம். ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - அனிருத்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28 அன்று (வியாழன்) படம் வெளியாகும் என அறியப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.