தனது மூத்த மகள் அவந்திகா விரைவில் நடிகையாகத் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாகப் பிரபல நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் குஷ்பு. முறை மாமன் படத்தில் நடித்தபோது இயக்குநர் சுந்தர் சி-யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உண்டு.
இந்நிலையில் தனது மூத்த மகள் அவந்திகா (21) விரைவில் நடிகையாகவுள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
என் மூத்த மகள், லண்டனில் உள்ள புகழ்பெற்ற நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். சொந்தமாக முயற்சி செய்யவேண்டும் என அவர் எண்ணுவதால் அவருடைய போராட்டம் இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறது. அவரை நாங்கள் அறிமுகப்படுத்த மாட்டோம், யாரிடமும் பரிந்துரை செய்ய மாட்டோம். அவருக்கு உங்கள் வாழ்த்துகள் தேவை என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.