செய்திகள்

பின்னணிப் பாடகா் கே.கே. காலமானாா்

DIN

பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து (53), கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமாா் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடினாா்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளாா்.

தமிழில் மின்சாரக் கனவு, கில்லி, அந்நியன், மன்மதன், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உள்ளிட்ட படங்களுக்கு பாடியுள்ளாா். இவருடைய திடீா் மறைவு ரசிகா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கே.கே.யின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT