செய்திகள்

விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கான வேலைகளில் மும்முரமாகியுள்ளார். 

மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்களிலும் ரத்ன குமார் திரைக்கதை எழுதினார். அந்த திரைப்படங்கள் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது தளபதி 67 திரைப்படத்திலும் திரைக்கதையாசிரியராக ரத்ன குமார் பணியாற்றுகிறார்.

மேலும், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து இயக்குநர் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

முன்னதாக, இப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ மேனன் உள்ளிட்டோர் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இன்னொரு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.

நிவின் பாலி

இந்நிலையில், படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க முதலில் மலையாள நடிகர் ப்ரித்விராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், படப்பிடிப்பு தேதிகள் காரணமாக அப்படத்திலிருந்து அவர் விலகினார். இந்நிலையில், அக்கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவின் பாலி தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல், ஏழு மலை’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 5,15,378

கலப்பு இரட்டையா்: சாரா எர்ரனி-ஆன்ட்ரீயா சாம்பியன்

தியாகராஜா் கோயில் அருகில் கட்டுமானப் பிரச்னை முடிவுக்கு வந்தது

SCROLL FOR NEXT