செய்திகள்

வெளியானது ’அவதார் - 2’ டிரைலர்

அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின்  டிரைலர்  வெளியாகியுள்ளது.

DIN

அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின்  டிரைலர்  வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். 

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்கிற இந்த இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தண்ணீரை மையப்படுத்தி உருவாகியிருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT