செய்திகள்

அன்புக் கடலுக்கு முன்பு நிற்பதில் மகிழ்ச்சி! ஷாருக் பிறந்தநாள் பதிவு!

அன்புக் கடலுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளது அவரின் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

DIN

அன்புக் கடலுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி என நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ளது அவரின் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் இன்று தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மும்பையிலுள்ள அவரின் இல்லம் முன்பு குவிந்தனர்.  

அவர்களைச் சந்தித்த ஷாருக்கான் அவர்களுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மக்கள் வெள்ளத்திற்கு முன்பு நின்று எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை நடிகர் ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளதாவது, இந்தக் கடலின் முன்பு வாழ்வது அற்புதமானது. என் பிறந்தநாளுக்கு இந்த அன்புக் கடல் பெருகிவருகிறது. நன்றி. என்னை சிறப்பு வாய்ந்தவனாக உணர வைத்ததற்கு நன்றி. மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

42 பந்துகளில் சதம் விளாசி இஷான் கிஷன் அதிரடி!

"பெண்களை யாராலும் தடுக்க முடியாது": விஞ்ஞானி செளமியா சாமிநாதன்

காத்திருப்புக்குத் தகுதியானது... கருப்பைப் பாராட்டிய சாய் அபயங்கர்!

SCROLL FOR NEXT