செய்திகள்

‘ரஞ்சிதமே’: விஜய் குரலில் வெளியானது வாரிசு பாடல் ப்ரோமோ

வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

DIN

வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய், மானசி பாடியுள்ள இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். 

இந்தப் பாடல் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT