செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு நிறுத்தம்?

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியதைத் தொடர்ந்து அவர் அடுத்து நடித்து வரும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் தனது படத்தில் இந்த இந்த காட்சிகள் வைக்க வேண்டுமென இயக்குநர் மடோன் அஸ்வினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மழைக் காரணமாகவே நிறுத்தப்பட்டதாகவும் திங்கள் முதல் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கல்லிடைக் குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி

களக்காடு - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

SCROLL FOR NEXT