மீண்டும் ’ஆதிபுருஷ்’ படப்பிடிப்பு?
பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்தது. ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி ஷனோன் நடிக்க, சயீப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரிப்பதாக பாஜகவினர் ஆதிபுருஷ் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மற்றொரு புறம் இந்தப் படத்தின் சிஜி காட்சிகள் கார்டூன் தொலைக்காட்சிகளை விட மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதையும் படிக்க | தெலுங்கில் ‘லவ் டுடே’ படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்!
மேலும், இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் மற்றும் வாரிசு, துணிவு படங்களுடன் மோதுவதைத் தவிர்க்கும் பொருட்டு அடுத்தாண்டு மே மாதத்தில் படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் கூடுதல் பணிகளுக்காக மீண்டும் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்த ‘ஆதிபுருஷ்’ குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.