செய்திகள்

‘ரஞ்சிதமே பாட்டுக்கு தியேட்டர்ல யாருமே உட்கார மாட்டீங்க...’ - தமன் நெகிழ்ச்சி ட்வீட்

'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் குறித்து இசையமைப்பாளர் தமன் நெகிழ்ச்சியாக ட்வீட் செய்தது வைரலாகி வருகிறது. 

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது. 

'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஜய் மற்றும் மானசியின் குரலில் இந்த பாடல் வெளியானது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் இது காப்பியடிக்கப்பட்ட பாடலென கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ரஞ்சிதமே பாடலின் மொத்த விடியோவையும் இப்போதுதான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உட்காரமாட்டீங்க... டாட். உங்களோட நானும் ஒரு ரசிகனா. விஜய் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்... 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT