முகப்பு
செய்திகள்

’நிச்சயிக்கப்பட்ட திருமணம் சரி வராது..’: நடிகர் அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன் திருமணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:48 AM
பகிர்:

நடிகர் அசோக் செல்வன் திருமணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘தெகிடி’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அசோக் செல்வன். அதன்பின் ’மன்மத லீலை’ ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட காதல் படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்துடன் இயங்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக தோல்வியை தவிர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அசோக் செல்வனிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘திருமணம் நடக்கும்போது நடக்கும். அடுத்தாண்டு நடந்தாலும் நடக்கலாம். இப்போது, சினிமாவைத்தான் காதலிக்கிறேன். தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் சரிப்பட்டு வராது’ எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →