டிரைவர் ஜமுனா 
செய்திகள்

டிரைவர் ஜமுனா திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி. கின்ஸிலின் இயக்கத்தில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

சாலை பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

திரைப்படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT