செய்திகள்

5 கோடி பார்வைகளைக் கடந்தது ‘ரஞ்சிதமே’ பாடல்

வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில்  இதுவரை 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

DIN

வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில்  இதுவரை 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்துக்கு இசை - தமன். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

சமீபத்தில்  'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்நிலையில், விஜய் பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிப்பட்ட சிப்பங்கள்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை!

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

டிஜிபி அலுவலகம் அருகே ‘ஏர்போர்ட்’ மூா்த்தி மீது விசிகவினர் சரமாரி தாக்குதல்!

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

SCROLL FOR NEXT