செய்திகள்

ட்விட்டரில் இணைந்த மூத்த இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் தேவா ட்விட்டரில் இணைந்துள்ளாதக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

1986ஆம் ஆண்டு மனசுக்கேத்த மன்னாரு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. அவர் பல்வேறு முன்னணி நடிகர் படங்களுக்கு இசையமைத்து பாடியும் இருக்கிறார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர் பாடிய ‘ஜித்து ஜில்லாடி’ பாடல் மிகவும் பிரபலமானது. இவர் கடைசியாக 2021இல் சில்லு வண்டுகள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நடிகர் விக்ரம் சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்தார். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா ட்விட்டரில் இணைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: 

வணக்கம்! இறுதியாக உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாளை நடக்கும் தேவா தேவா நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT