முகப்பு
செய்திகள்

ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த இன்பப் பரிசு! வைரல் படங்கள்!!

நடிகை ஷாலியின் பிறந்தநாளை கணவர் குடும்பத்துடன் சேர்ந்து தனியார் நட்சத்திர விடுதியில் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
ஷாலினி பிறந்தநாளில் குடும்பத்துடன் நடிகர் அஜித்குமார்
பகிர்:

நடிகை ஷாலியின் பிறந்தநாளை கணவர் குடும்பத்துடன் சேர்ந்து தனியார் நட்சத்திர விடுதியில் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. 

நடிகர் அஜித் குமார் குடும்பத்துடனும், உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஷாலினி. 
இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

22 ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் கொண்டாடப்படுகின்றனர். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு ஓய்வளித்துள்ள ஷாலினி, நேற்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடும் அஜித்குமார், மனைவி ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிறந்தநாளை நட்சத்திர விடுதியில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

கேக் வெட்டும்போது மகள், மகனுடன் நடிகர் அஜித்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தும் நடிகர் அஜித்குமார் தனது பிஸியான நேரத்திலும் குடும்பத்தின் முக்கியத்துவம் கருதி மனைவியின் பிறந்தநாளை நட்சத்திர விடுதியில் கொண்டாடியுள்ளதாக ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அமர்ந்திருக்கும் ஷாலினி அருகில் நின்றவாறு நடிகர் அஜித்குமார் இருக்கும் படம் பலரும் விரும்பும் படமாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.