செய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கும் சிறுவர் சினிமா: முழு விவரம்

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

DIN

நவ்வி ஸ்டூடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் வழங்கும் வாழை திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. 

வாழை படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். 

தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். 

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்கு அடுத்ததாக தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக வாழை படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார். மாமன்னன் படப்பிடிப்பு நடைபெறு வரும் வேளையில் வாழை படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியுள்ளது. 

சிறுவர்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு. 

தொழில்நுட்பக் குழு விவரம் 

எழுத்து இயக்கம் - மாரி செல்வராஜ்
ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர் 
இசை - சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் - குமார் கங்கப்பன்
படத்தொகுப்பு  - சூரிய பிரதமான்
சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன் 
நடனம் - சாண்டி 
பாடல்கள் - யுகபாரதி, வெயில் முத்து, 
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் - வெங்கட் ஆறுமுகம்
தயாரிப்பாளர் - திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT