முகப்பு
செய்திகள்

துணிவு ’ஜில்லா..ஜில்லா’ பாடல் குறித்து புதிய தகவல்

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ’சில்லா சில்லா’ பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 22 நவம்பர், 2022 at 11:13 AM
பகிர்:

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ’சில்லா சில்லா’ பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் அறிமுக பாடலான ‘சில்லா..சில்லா’ பாடலின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாகவும் இதில் அஜித் கலந்துகொண்டு நடனம் ஆட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.