வெங்கட் பிரபு - நாக சைதன்யா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
வெங்கட் பிரபு - நாக சைதன்யா படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் நாளை வெளியாகுமென புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் நாக சைன்யாவுக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறாராம். இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் அறிவித்துள்ளது. அதன் படி இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர், அர்விந்தசாமி ஆகியோர் நடிகின்றனர்.
இந்நிலையில் படத்தின் முன்னோட்ட அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பல காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறை ஆடையில் நாக சைதன்யா இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
Advertisement
Advertisement
நாளை காலை 10.18 மணிக்கு படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.