செய்திகள்

முதல் வாரத்திலேயே ரூ. 100 கோடி வசூலித்த ஹிந்தி த்ரிஷ்யம் 2

ஹிந்தி த்ரிஷ்யம் 2 படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளது.

DIN

மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான படம் த்ரிஷ்யம். கேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழைத் தவிர இதர மொழிகளில் வெளியான ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினார்கள். மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.  

அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண் நடிப்பில் த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் 2015-ல் ஹிந்தியில் வெளியானது. இந்தப் படத்தின் 2-வது பாகத்தில்  அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண், அக்‌ஷய் கண்ணா போன்றோர் நடித்தார்கள். இயக்கம் - அபிஷேக் பதக். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். த்ரிஷ்யம் 2 நவம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் ஹிந்தி த்ரிஷ்யம் 2 படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளது. முதல் 7 நாள்களில் அந்தப் படம் இந்தியாவில் ரூ. 104 வசூலை அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் 2022-ல் அதிக வசூலை எட்டிய ஹிந்திப் படம் என்கிற சாதனையை ஹிந்தி த்ரிஷ்யம் 2 அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT