பிரியங்கா நல்கார்  
செய்திகள்

தமிழ்ப் படங்களில் சன் டிவி 'ரோஜா' சீரியல் கதாநாயகி!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரின் கதாநாயகி பிரியங்கா நல்கார் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரின் கதாநாயகி பிரியங்கா நல்கார் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 

சன் தொலைக்காட்சியில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான ரோஜா தொடர் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால் இந்தத் தொடரில் ரோஜா - அர்ஜுன் ஆகிய முதன்மை பாத்திரங்களில் நடித்த பிரியங்கா நல்கார் - சிபு சூர்யன் ஆகியோரின் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர்.

ரோஜா தொடரில் அர்ஜுன் - ரோஜா இடையேயான காட்சிகள் இளையோரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததால், குடும்பப் பெண்களைத் தாண்டி இளைய தலைமுறையினரையும் அந்தத் தொடர் கவர்ந்தது.

இதன் விளைவாக சமூக வலைதளங்களில அவர்களுக்கு தனித்த பக்கங்களையும் அவர்களின் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

ரோஜா தொடரில் நடித்த பிரியங்கா நல்கார் கன்னடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். சில கன்னட தொடர்களில் அவ்வபோது நடித்திருந்தாலும், தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடர்தான் அவரை பலரின் இல்லங்களில், தங்கள் வீட்டுப் பெண்ணாக கொண்டுசென்று சேர்த்தது.

ஆனால், பிரியங்கா நல்கார், சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே, வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்துள்ளார். 

தீயா வேலை செய்யணும் குமாரு எனும் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து சம்திங் சம்திங், நானே ராஜா நானே மந்திரி, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும், வெல்கம் டூ அமெரிக்கா, கிக் -2, ஹைப்பர், வைஃப் ஆஃப் ராம், போன்ற தெலுங்கு படங்களிலும் பிரியங்கா நல்கார் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT