செய்திகள்

ரஜினியை குடும்பத்துடன் சந்தித்த பிரபல நகைச்சுவை நடிகர்(படங்கள்)

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல நகைச்சுவை நடிகர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

DIN

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல நகைச்சுவை நடிகர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் காட்சிகள் கடலூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கோகுலம் ஸ்டுடியோவில் நான்காம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் திருமண நாளையொட்டி, நேற்றிரவு குடும்பத்துடன் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ரஜினியுடன் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக! Vijay பேச்சு

SCROLL FOR NEXT