செய்திகள்

பொன்னியின் செல்வன் முதல்நாள் வசூல் ரூ.78 கோடியா? 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 78.29 கோடி வசூலானதாக  தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 78.29 கோடி வசூலானதாக  தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் நேற்று (செப்.30) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படம்தான் தமிழ்நாட்டில் அதிக அளவு வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 25.86 கோடி வசூலானதாகவும், உலகம் முழுவதும் ரூ. 78.29 கோடி வசூலானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT