செய்திகள்

பிரம்மாஸ்திரம் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரம்மாஸ்திரம்  இதுவரையிலான வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DIN

பிரம்மாஸ்திரம்  இதுவரையிலான வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமிதாப் பச்சன், ரன்பிர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கிய படம் - பிரம்மாஸ்திரம் முதல் பாகம்: ஷிவா. மணிகண்டன் உள்பட ஐந்து பேர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளார்கள். இணை தயாரிப்பாளர் - கரண் ஜோஹர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள 3-வது படம் இது.

பிரம்மாஸ்திரம் படம் உலகம் முழுக்க 8,913 திரையரங்களில் திரையிடப்பட்டது. பிரம்மாஸ்திரா என்கிற பெயரில் ஹிந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் பிரம்மாஸ்திரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

பிரம்மாஸ்திரம் படம் முதல் நாளன்று உலகெங்கும் அனைத்து மொழிகளிலும் ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 445 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5,000 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 125 கோடியை வசூலித்திருந்தது. 

ரூ. 410 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வதிரையரங்க வெளியீட்டிலேயே லாபம் அடைந்துள்ளது. மேலும், ஓடிடியில் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய வசூலைக் குவித்ததால் இந்தாண்டில் பாலிவுட்டில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற பெருமையையும் அடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT