செய்திகள்

விவாகரத்து முடிவைக் கைவிடும் தனுஷ் - ஐஸ்வர்யா?

நடிகர் தனுஷூம் அவர் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களின் விவாகரத்து முடிவைக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் தனுஷூம் அவர் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களின் விவாகரத்து முடிவைக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். 18 ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்த இந்த இணை திடீரென பிரிவதாக அறிவித்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அப்போது, தனுஷ் வெளியிட்ட பதிவில், 

நண்பர்களாகவும் தம்பதிகளாகவும் குழந்தைகளுக்கு பெற்றோராகவும் பாதுகாவலர்களாகவும் ஒன்றாக பயணித்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது எங்கள் பாதை தனித்தனியாக பிரிய வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்கான நேரத்திற்காக நானும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.

எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுத்து, இந்த சூழலை தனிப்பட்ட முறையில் எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதனை இயக்குநரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யாவும் அறிக்கையாக வாயிலாக உறுதிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் , தற்போது கணவன் - மனைவிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைப் பேசி தீர்க்கலாம் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளதாகவும் அதனால் இருதரப்பிலிருந்தும் விவாகரத்து மனுவை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையத்துக்கு தவெக ஆலோசனை!

சிறப்பு தீவிர திருத்தம்: குடியுரிமை மீதான தாக்குதல் - திருமாவளவன்

ஷாருக்கான் பிறந்த நாள்: கீங் டீசர்!

SCROLL FOR NEXT