செய்திகள்

வசூலில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ள பொன்னியின் செல்வன்!

தமிழ்நாட்டில் ஆறு நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை செய்துள்ளது பொன்னியின் செல்வன் படம். 

DIN

தமிழ்நாட்டில் ஆறு நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை செய்துள்ளது பொன்னியின் செல்வன் படம். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

பொன்னியின் செல்வன் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை அள்ளியிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் மிக வேகமாக (ஆறு நாள்களில்) ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற படம் என மெட்ராஸ் டாக்கீஸ் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து!

அடர் பனிமூட்டம் எதிரொலி: பொதுக்கூட்டத்துக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்த்த பிரதமர் மோடி!

அம்மா, தங்கையிடம் இப்படிச் சொல்வார்களா? ராதிகா ஆப்தேவின் கசப்பான அனுபவம்!

SCROLL FOR NEXT