விஜய் ஆண்டனி 
செய்திகள்

’அது கேவலமானது’ தன் முதல் பாடல் குறித்து விஜய் ஆண்டனி

தமிழில் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.

DIN

தமிழில் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் ’நான் அவன் இல்லை’, ‘காதலில் விழுந்தேன்’, ‘வேட்டைக்காரன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளாராக பணியாற்றி உள்ளார்.

குறிப்பாக, இவருடைய இசையில் வெளியான ‘ஆத்திச்சூடி’ , ‘நாக்க..மூக்க..’ உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தவை.

பின்னர், இசையமைப்பாளாராக இருந்தவர் ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர். அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் ‘சலீம்’ ‘இந்தியா பாகிஸ்தான்’ படங்களில் நடித்து வணிக ரீதியாகவும் தன்னை நிரூபித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் 150 நாள்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்ததுடன் வர்த்தக ரீதியாகவும் பல கோடிகளை அள்ளியது.

தற்போது, ரத்தம் படத்தில் நாயகனாக நடித்துவருகிறார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனி டிவிட்டர் பக்கத்தில்   தன் முதல் பாடலைப் பாடிய ரசிகரின் விடியோவைப் பகிர்ந்து 'என் முதல் கேவலமான இசை. சிலவற்றின் கவர் வெர்சன். போகிற நிலைமையைப் பார்த்தால் ஹிட் அடிக்கும் போல’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT