முகப்பு
செய்திகள்

ராஷ்மிகா- விஜய் தேவர கொண்டா மாலத்தீவுக்கு பயணம்! ரகசிய காதலா?

நடிகர் விஜய் தேவர கொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மாலத்தீவுக்கு ஒரே விமானத்தில் புறப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

நடிகர் விஜய் தேவர கொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மாலத்தீவுக்கு ஒரே விமானத்தில் புறப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து முதன் முதலில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இருவரின் ஜோடி அனைவரையும் கவர்ந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி ‘டியர் காம்ரேட்’ படத்தில் மீண்டும் ஒன்றாக நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது ஸ்கிரின் பிரசன்ஸ்தான் முக்கிய காரணமாக இருந்தது. முதல் படத்திலிருந்தே இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இதை உண்மை என்பது போல ‘டியர் காம்ரேட்’ படத்தில் ஒரு லிப் லாக் காட்சியும் அட்டகாசமாக இடம் பெற்று இருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என்றே இருவரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இருவரும் தனித்தனியாக விமான நிலையத்திற்கு வந்து ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இருவரும் மீண்டும் ரகசியமாக காதலிக்கிறார்களா என்ற  சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.