செய்திகள்

நடிகர் கார்த்தி பாடிய 'சர்தார்' பட ஏறுமயிலேறி பாடல் வெளியானது!

சர்தார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

DIN

சர்தார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக இந்தப் படத்தை வெளியிடுகிறார். 

பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை  யுகபாரதி  எழுதியுள்ளார். 

சர்தார் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான சர்தார் பட டீசரில் வித்தியாசமான தோற்றங்களில் நடிகர் கார்த்தி நடித்து அசத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT