செய்திகள்

அவருக்கு பதில் இவரா ? 'ஜெயிலர்' படம் குறித்து புதிய தகவல்

ஜெயிலர் படத்தில் இயக்குநர் நெல்சன் புதிதாக மாற்றம் ஒன்றை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஜெயிலர் படத்தில் இயக்குநர் நெல்சன் புதிதாக மாற்றம் ஒன்றை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஜெயிலர் படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருவதால் மிகுந்த கட்டுப்பாட்டுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்துவருகிறதாம். 

நெல்சன் இயக்கிவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு,  விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் முக்கிய வேடத்தில் பிரியங்கா மோகன் நடிக்க, சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் மிர்னா மேனன் என்ற மலையாள நடிகை ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளாராம். இவர் பிரியங்கா மோகனுக்கு பதிலாக களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

மிர்னா ஏற்கனவே தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் பட்டதாரி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது புர்கா படத்தில் அவர் நடித்துவருகிறார். 

இதன் ஒரு பகுதியாக பிரியங்கா மோகன் தற்போது தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT