முகப்பு
செய்திகள்

பாங்காக் படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டத்தில் துணிவு!

துணிவு திரைப்படத்தின் பாங்காக் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 12 அக்டோபர், 2022 at 6:52 PM
பகிர்:

துணிவு திரைப்படத்தின் பாங்காக் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. 

இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித்குமார் பங்குபெறும் பிற காட்சிகளைப் படமாக்க படக்குழு கடந்த சில நாள்களுக்கு முன் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது.

இந்நிலையில், தற்போது பாங்காக்  படப்பிடிப்பு நிறைவு பெற்றள்ளதாகவும் அஜித் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.