செய்திகள்

வெங்கட் பிரபு - நாக சைதன்யா படப்பிடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் - என்ன நடந்தது?

DIN

கிராம மக்களின் போராட்டத்தால் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மாநாடு, மன்மத லீலை படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் நாக சைன்யாவுக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறாராம். இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். 

இப்பட முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே மேலக்கோட் பகுதியில் நடைபெற்றுவருகிறது. 

அங்கு கோவில் ஒன்றின் அருகே மிகப்பெரிய செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுவந்துள்ளது. அந்த செட்டானது மதுபானக் கூட செட் என கூறப்படுகிறது.

இது கோவிலுக்கு வரும் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் உள்ளதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் மதுபான கூட செட்டையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT