செய்திகள்

''கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க'' - விஜய் ஆண்டனி எச்சரிக்கை

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

DIN

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆண்டு கோடியில் ஒருவன் என்ற படம் வெளியாகியிருந்தது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், காக்கி, வள்ளிமயில் போன்ற பல பல படங்கள் அவரது நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. 

இதில் ரத்தம் படத்தை 'தமிழ் படம்' பட இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து நடிப்பதோடு, முதன்முறையாக இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க.

அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க என்று பதிவிட்டுள்ளார். தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக பதிவிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என ரசிகர்கள் அவரை கேள்வி எழுப்பிவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT