'துணிவு' படத்தின் கதை இதுவா ? மீண்டும் உண்மை சம்பவத்தைக் கையிலெடுத்த வினோத்
துணிவு படத்தின் கதைப் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வாரிசு படத்துக்கு போட்டியாக துணிவு பொங்கலுக்கு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் 'துணிவு' படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | விஜய் சேதுபதி - வடிவேலு இணையும் படம் - இயக்குநர் யார் தெரியுமா ?
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை வினோத் கையிலெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.