செய்திகள்

பிரின்ஸ் திரைப்படத்தின் 3ஆவது பாடல் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் 3ஆவது பாடலை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். 

DIN

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் 3ஆவது பாடலை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். 

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் 3ஆவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே ‘பிம்பிலிக்கா பிளாப்பி’, ஜெசிக்கா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘Who am I" என்கிற மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. 

இந்தப் பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற உக்ரைன் நாட்டைச்  சேர்ந்த நடிகை நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

பாஜக மாநில செயலாளருக்கு எதிரான புகார்: சேலம் நீதிமன்றத்துக்கு உத்தரவு

இரவு முதல் பலத்த மழை! புது தில்லிக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT