செய்திகள்

ஹன்சிகாவுக்கு திருமணம்?: 450 வருட பழமையான கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்!

450 வருட பழமையான கோட்டையில் நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. சில வருடங்களாக தமிழில் படம் நடிக்கவில்லை. சமீபத்தில் ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அதுவும் பழைய படம் காலம் தாழ்த்தி ரிலீஸ் ஆகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் புதிய தமிழ் படமொன்றில் நடிக்கிறார். அதுவும் ஏற்கனவே அவர் நடித்த சேட்டை படத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். 

2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். 

தற்போது ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மும்பையை சார்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெறுவதாகவும் அவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற 450 பழமையான கோட்டை மற்றும் அரண்மனையில் ஹன்சிகா திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இந்த கோட்டை திருமணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து ஹன்சிகா தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஹன்சிகாவின் இந்த திருமணம் அட்டகாசமாக நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்த அரண்மனையின் பெயர் முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனை. ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு இடங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிட்டத்தக்கது. 

இவரது திருமண செய்திக்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். டிசம்பரில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் மாப்பிள்ளை யார், எந்த தேதியில் என்று அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் பொறுமைதான் காக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு கிராம் தங்கம்!

மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல வாகனங்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்!

அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் திமுக இளைஞர் அணிக்கு ஒரு லட்சம்

அழைப்பு அனுப்புதல் மோசடி! இப்படியும் ஒரு மோசடியா? மக்களே எச்சரிக்கை!!

SCROLL FOR NEXT