செய்திகள்

சமந்தாவின் ‘யசோதா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘யசோதா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

DIN

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிக்கும் திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.  

சமீபத்தில் நடிகை சமந்தா யசோதா படக்குழுவினருடன் மோதலில் ஈடுபட்டதால் படம் தாமதமாகிறதென குற்றச்சாட்டு எழுந்தது.  தற்போது, சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.  

இந்நிலையில், யசோதா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது. நவம்பர் 11ஆம் தேதி 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகுமென  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் தாக்கல்: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

திமுக அரசு ஒரேயொரு குடும்பத்துக்கானது மட்டுமே: நயினார் நாகேந்திரன்

2 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

கம்பத்தில் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!

வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

SCROLL FOR NEXT