செய்திகள்

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மம்மூட்டி

காதல் படத்துக்கு வாழ்த்து சொன்ன சூர்யாவுக்கு நடிகர் மம்மூட்டி நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

காதல் படத்துக்கு வாழ்த்து சொன்ன சூர்யாவுக்கு நடிகர் மம்மூட்டி நன்றி தெரிவித்துள்ளார். 

நடிகை ஜோதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு மம்மூட்டிக்கு ஜோடியாக மலையாள படமொன்றில் நடிக்கிறார். காதல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோ பேபி இயக்குகிறார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. போஸ்டரைப் பகிர்ந்த நடிகர் சூர்யா,  முதல் நாளிலிருந்து இந்தப் படத்தின் ஐடியா மற்றும்  இயக்குநர் ஜோ பேபி குழுவினர் மற்றும் மம்மூட்டி கம்பெனி ஆகியவை வைத்த ஒவ்வொரு அடியும், சிறப்பாக இருந்தது. மம்மூட்டி ஜோ மற்றும் குழவினருக்கு வாழ்த்துகள். பிறந்த நாள் வாழ்த்துகள் ஜோ எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு  அன்புள்ள சூர்யா நன்றி என நடிகர் மம்மூட்டி பதிலளித்துள்ளார். 

இந்தப் படத்தை நடிகர் மம்மூட்டியின் மம்மூட்டி கம்பெனி நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஜோதிகா மலையாளத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜோ பேபி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT