செய்திகள்

புதிய வரலாறு படைத்த 'பொன்னியின் செல்வன்': வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்

பொன்னியின் செல்வன் திரைப்பட வசூல் விவரத்தை லைக்கா புரொடக்சன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

DIN

பொன்னியின் செல்வன் திரைப்பட வசூல் விவரத்தை லைக்கா புரொடக்சன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கினார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது. 

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

விமர்சன ரீதியாக இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் அதிக வசூலித்த படங்களில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து பொன்னியின் செல்வன் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் உலக அளவில் இந்தப் படம் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.  இதுவரை ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் ரூ.450 கோடிக்கும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT