செய்திகள்

ரித்விக்கால் 'கைதி' தில்லியாக மாறிய 'சர்தார்' கார்த்தி - வைரலாகும் விடியோ

சர்தார் படப்பிடிப்பில் யூடியூப் பிரபலம்  ரித்விக்குடன் நடிகர் கார்த்தி உரையாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

DIN

சர்தார் படப்பிடிப்பில் யூடியூப் பிரபலம்  ரித்விக்குடன் நடிகர் கார்த்தி உரையாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 21) ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். 

பி.எஸ்.மித்ரனின் முதல் இரண்டு படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் சர்தார் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் கார்த்தியுடன் ஜோடியாக ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் முன்னிலையில் ரித்விக் கைதி இசையை முனுமுனுத்த படி லாரி ஒட்டுவது போல ஸ்டியரிங்கை அசைக்கிறார். அப்போது கார்த்தி சத்தம் பத்தாது என அவர் கைதி பின்னணி இசையைக் கார்த்தி இன்னும் அதிக சத்தமாக முனுமுனுக்கிறார் இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT