செய்திகள்

பிக்பாஸ்: கமலுக்கு முன்பே குறும்படம் போட்டுக்காட்டிய ரசிகர்கள் - மாட்டிக்கொண்ட விக்ரமன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் குறித்த குறும்படத்தை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர். 

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் குறித்த குறும்படத்தை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர். 

கடந்த அக்டோபர் 9 ஆம் தேததி துவங்கிய பிக்பாஸ் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்க முடியும் என்பதால் அடிக்கடி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

தற்போது ஜி.பி. முத்து மக்களின் ஃபேவரைட்டாக இருக்கிறார். அதே போல அசல் குவின்ஸியிடம் நடந்து கொள்ளும் முறை விமர்சனங்களை சந்தித்துவருகிறது. நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்கள் குறித்து தனது விமர்சனங்களை பதிவு செய்தவதற்கு முன்பாகவே ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். 

அந்த வகையில் விக்ரமன் குறித்து குறும்படம் ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள். அதில் அசல் மற்றும் தனலட்சுமி இருவரும் சண்டைபோட்டுக்கொள்ளும்போது விக்ரமன் அருகில் தான் இருக்கிறார்.

பின்னர் எதுவுமே தெரியாததுபோல தனலட்சுமியிடம் என்ன ஆனது எனக் கேட்கிறார் என ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மற்றொருபுறம் விக்ரமின் ரசிகர்கள் அவர் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பைக் காட்டுவதாகவும் இந்த விடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT