செய்திகள்

பொன்னியின் செல்வன்: வெளியானது ராட்சச மாமனே விடியோ பாடல்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ராட்சச மாமனே விடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

DIN

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ராட்சச மாமனே விடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கியிருந்தார், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும்  ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததால் இந்தப் படம் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், ரவி வர்மனின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு கூடுதலாக அமைந்தது. 

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே சோழா சோழா என்ற பாடல் வெளியான நிலையில் தற்போது இந்தப் படத்திலிருந்து ராட்சச மாமனே என்ற பாடல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் பாடல் கொண்டாடப்பட்டது போல யூடியூபில் வெளியான பின் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

4வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

SCROLL FOR NEXT