செய்திகள்

இளம்பெண்ணை சின்னத்திரை நடிகர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல்

சின்னத்திரை நடிகர் பிருத்விராஜ் இளம் பெண் ஒருவரை திருமணம் செயதுகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சின்னத்திரை நடிகர் பிருத்விராஜ் இளம் பெண் ஒருவரை திருமணம் செயதுகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பப்லு என அழைக்கப்படும் பிருத்விராஜ் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே தொடரில் நடித்துவருகிறார். முன்னதாக ரமணி vs ரமணி, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். 

வானமே எல்லை, புதிய மன்னர்கள், அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா போன்ற சில படங்களிலும் பிருத்வி ராஜ் நடித்திருக்கிறார். தற்போது சில தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். 

பிருத்வி ராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி அஹத் என்ற மகன் இருக்கிறார். இவர் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகி தன் மகனை கவனித்துவந்தார். 

தற்போது இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 23 வயதாகும் இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிருத்விராஜுக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சிங்கப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் உதவியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட நட்பு காதலாக மாறியிருக்கிறது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிருத்விராஜ் இதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (24.11.2025)

கரூர் சம்பவம்: சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி..! சோகத்தில் ரசிகர்கள்!

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

SCROLL FOR NEXT