செய்திகள்

தனுஷைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட்  படமொன்றில் நடிக்கவிருக்கிறார். 

DIN

நடிகை ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட்  படமொன்றில் நடிக்கவிருக்கிறார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

இதனையடுத்து நடிகை ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட் படமொன்றில் நடிக்கவிருக்கிறார். 'தி ஐ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை டேப்ன் ஸ்மோன் இயக்குகிறார். 

'தி லாஸ்ட் கிங்டம்' பட புகழ் மார்க் ரோஸ்லே இந்தப் படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புக்காக நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது கிரீஸ் நாட்டில் இருக்கிறார்.

1980 களில் நடப்பது போல இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  ''நான் கிரீஸ் நாட்டில் இருக்கும் காரணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மனதுக்கு நெருக்கமான இந்தப் படத்தில் பணிபுரிவது உற்சாகமளித்துள்ளது''  என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்திருந்தார். விரைவில் சமந்தாவும் ஒரு ஹாலிவுட் படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT