நடிகர் கார்த்தி கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ விடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிட, தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பாக வெளியிட்டுள்ளார்.
தெலுங்கில் இந்தப் படத்தை பிரபலப்படுத்தும் விதமாக நடிகர் நாகார்ஜுனா தொகுத்துவழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கார்த்தி கலந்துகொண்டுள்ளார். இன்று(அக்டோபர் 23) ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா நடிக்க, யூடியூப் பிரபலம் ரித்விக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.