செய்திகள்

ஹிந்தி இயக்குநருடன் கைகோர்க்கும் சுந்தர்.சி

இயக்குநர் சுந்தர்.சி தனது அடுத்த படத்துக்காக ஹிந்தி பட இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் சுந்தர்.சி தனது அடுத்த படத்துக்காக ஹிந்தி பட இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுந்தர்.சி தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள காஃபி வித் காதல் படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

மேலும் பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடித்துள்ள சுந்தர்.சி அடுத்ததாக வி.இசட்.துரை இயக்கத்தில் தலைநகரம் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சுந்தர்.சி அடுத்ததாக நடிக்கும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பரமபதம் விளையாட்டு பட இயக்குநர் திருஞானம் இயக்கும் இப்படத்தில் படத்தில் சுந்தர்.சி நடிக்கிறார். அவருடன் ஹிந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யமும் இணைந்து நடிக்கவுள்ளார். ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கிறார். 24 ஹவர்ஸ் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்த இமைக்கா நொடிகள் பெரிய வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

31 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பைக்குத் தேர்வான கஜகஸ்தான்!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் டிரம்ப்!

SCROLL FOR NEXT