செய்திகள்

''என்னால சிரிப்பை அடக்க முடியல'' - நடிகர் விக்ரம் பகிர்ந்த விடியோ

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்த விடியோவை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார். 

DIN

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்த விடியோவை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார். 

பிரிட்டன் வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு இந்திய அளவில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகியுள்ளது அந்நாட்டு மக்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. ''அவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர் நம் பிரச்னைகளை அவரால் சரியாக புரிந்துகொள்ள முடியாது'' என்று டிவி நிகழ்ச்சியில் ஒருவர் பேசியுள்ளார். 

'தி டெய்லி ஷோ' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இந்த விடியோவைப் பகிர்ந்து 'ஒருவரின் கொள்கை, திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர அவரது நிறத்தை மதிப்பிடக் கூடாது' என பேசியுள்ளார்.

இந்த விடியோவைப் பகிர்ந்த நடிகர் விக்ரம், ''இதைப் பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மன்னிக்கவும், இதனை பகிர வேண்டும் என நினைத்தேன். இந்தியாவுக்கு பெருமை. முதல் தமிழ் இந்தியன் அமெரிக்காவின் குடியரசு துணை தலைவர், இப்பொழுது முதல் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் பிரதமர்.  வா ராஜா வா'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT