வெளியான 5 நாட்களில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களுக்கு கிடைத்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய் என எந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகவில்லை. அவர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் வெளியாகின.
இதில் நடிகர் கார்த்தியின் சர்தார் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் விமசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
இதையும் படிக்க | ''என்னால சிரிப்பை அடக்க முடியல'' - நடிகர் விக்ரம் பகிர்ந்த விடியோ
இருப்பினும் வசூலைப் பொருத்தவரை இரண்டு படங்களின் வசூலும் கிட்டத்தட்ட சம அளவிலேயே இருக்கின்றன. கார்த்தியின் சர்தார் திரைப்படம் 5 நாட்களில் ரூ. 50 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாகவும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் 5 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.