முகப்பு
செய்திகள்

சமந்தாவின் ‘யசோதா’ டிரைலர் வெளியீடு

சமந்தா நடிப்பில் உருவான ‘யசோதா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சமந்தா நடிப்பில் உருவான ‘யசோதா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.  

சமீபத்தில் நடிகை சமந்தா யசோதா படக்குழுவினருடன் மோதலில் ஈடுபட்டதால் படம் தாமதமாகிறதென குற்றச்சாட்டு எழுந்தது.  தற்போது, சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.  

இந்நிலையில், யசோதா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படம்,  நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →